
தங்க மீனும் மீனவரும்

ஒரு ஏரிக்கு பக்கத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு தினமும் ஏரிக்கு போயி மீன்பிடிப்பாரு ,அந்த மீன சந்தையில வித்து தன்னோட மனைவிக்கு பிடிச்சத வாங்கிட்டு வருவாரு
ஆனா அவரோட மனைவி ரொம்ப பேராசை காரியா இருந்தாங்க ,எவ்வளவு பொருள் வாங்கிட்டு வந்தாலும் அதிகமா வேணும்னு கேட்டுகிட்டே இருப்பாங்க
ஒருநாள் அந்த மீனவர் மீன் பிடிக்க போனாரு ,அப்ப அவரோட தூண்டில்ல ஒரு தங்கமீன் மாட்டுச்
மீனவரே மீனவரே ,என்ன விட்டுடுங்க ,நான் உங்களுக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பேன்னு சொல்லுச்சு அந்த தங்க மீன்
அந்த மீன் பேசுனத கேட்டதும் மீனவருக்கு ஆச்சர்யமா போச்சு ,உடனே அவரு அந்த மீனை தூண்டில்ல இருந்து விடுவிச்சா
இந்த விஷயத்தை தன்னோட மனைவிக்கு சொன்னாரு ,அதுக்கு அவுங்க ரொம்ப கோபப்பட்டாங்க
பேசுற தங்க மீன் கிட்ட ஒரு நல்ல மாடி வீடு கேட்டிருக்கலாம்ல ஏன் அத போக விட்டீங்கனு சத்தம் போட்டாங்க . தங்கமீனே தங்க மீனே எனக்கு ஒரு நல்ல மாளிகை வீடு வேணும்னு கேட்டாரு ,உடனே சரினு சொல்லி ஒரு மந்திரத்தை சொல்லுச்சு அந்த மீன்வீட்டுக்கு வந்து பார்த்தா ,அவரோட வீடு ஒரு பெரிய மாளிகையா மாறியிருந்துச்சு
ஆனா அவரோட மனைவிக்கு ஆசை அடங்கல ,நீங்க திரும்ப போயி நமக்கு ஒரு அரண்மனை வேணும்னு கேளுங்கன்னு சொன்னாங்கஉடனே ஏரிக்கு வந்து தனக்கு ஒரு அரண்மனை வேணும்னு கேட்டாரு அந்த மீனவர்உடனே அதுக்கும் ஒரு மந்திரத்தை சொல்லுச்சு அந்த மீன் ,வீட்டுக்கு திரும்பி வந்து பாத்தா அவரோட வீடு அரண்மனையா மாறியிருந்துச்சு .