ஊமை வெயில்

ஊமை வெயில்

bookmark

கட்டிலில் படுத்தபடி வாரப் பத்திரிக்கையில் மூழ்கியிருந்ததிருமலைசாமி, தலையைத் தூக்கி கடிகாரத்தைப் பார்த்தான்.  மணி 10.30.

​ “இன்னுமா வேலை முடியலை இவளுக்கு?” மனைவியைமனசுக்குள் கரித்துக் கொட்டி விட்டு, மீண்டும் வாரப்பத்திரிக்கைக்குள் நுழைந்தான்.

தன் கணவன் தனக்காக படுக்கையறையில் காத்துக்கொண்டிருப்பான் என்பதற்காக அவசர அவசரமாய்பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு, மறுநாள் காலைச்சமையலுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டு, கையில் பால் டம்ளருடன் பெட்ரூமிற்குள் புகுந்தாள் சாந்தா.

​ “ஏன் சாந்தா இவ்வளவு நேரம்?” எரிச்சலுடன் கேட்டான்திருமலைசாமி.

​ “பின்னே?...வேலையெல்லாம் முடிச்சிட்டுத்தானே வரணும்?” சலிப்போடு சொன்னாள்.  

​ “ஆமாம் பதிலுக்கு மட்டும் கொறைச்சலில்லை!...அதுசெரி…தம்பி வெங்கடேசு வந்திட்டானா?”

​ “ம்.…வந்தாச்சு...சாப்பிட்டாச்சு...வழக்கம் போல் பாயையும்தலையணையையும் எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்குப்போயாச்சு” என்றாள் சாந்தா.

​ “ஆமாம்…உன் கிட்டே ஒண்ணு கேட்கணும்னுநெனச்ச்சிட்டிருந்தேன்…நேத்திக்கு தரகர் வந்து பொண்ணைப்பத்திச் சொன்னப்ப நீ சரியாவே பிடி குடுத்துப்பேசலையாமே?....பாவம் அந்த தரகர்…என் கிட்ட வந்து சொல்லிரொம்ப வருத்தப்பட்டார்!...ஏன் சாந்தா?...ஏன் அப்படிநடந்துக்கிட்டே?” சட்டென்று சீரியஸானான் திருமலைசாமி.

“அட சொல்லு சாந்தா…என்னைப் பொறுத்த வரை நீசொல்றது என்னிக்குமே சரியாய்த்தான் இருக்கும்” 

​கணவனின் அந்த சான்றுரையைக் கேட்ட்தும் குளிர்ந்துபோன சாந்தா மெதுவாக அவனை நெருங்கி, உரசியபடி, கட்டிலில் அமர்ந்தாள்.

​அந்த உரசலில் சூடாகிப் போனான் திருமலைசாமி,

​ “அதாவது…நாம சீக்கிரமே உங்க தம்பிக்கு கல்யாணம்பண்ணி வெச்சோம்ன்னா…வர்றவ அவனை உடனேகிளப்பிக்கிட்டு…தனிக் குடித்தனம் போயிடுவா”

​ “அது இயல்புதானே?...அதிலென்ன தப்பு?” சாதாரணமாய்ச்சொன்னான் திருமலைசாமி.

“அட சொல்லு சாந்தா…என்னைப் பொறுத்த வரை நீசொல்றது என்னிக்குமே சரியாய்த்தான் இருக்கும்” 

​கணவனின் அந்த சான்றுரையைக் கேட்ட்தும் குளிர்ந்துபோன சாந்தா மெதுவாக அவனை நெருங்கி, உரசியபடி, கட்டிலில் அமர்ந்தாள்.

​அந்த உரசலில் சூடாகிப் போனான் திருமலைசாமி,

​ “அதாவது…நாம சீக்கிரமே உங்க தம்பிக்கு கல்யாணம்பண்ணி வெச்சோம்ன்னா…வர்றவ அவனை உடனேகிளப்பிக்கிட்டு…தனிக் குடித்தனம் போயிடுவா”

​ “அது இயல்புதானே?...அதிலென்ன தப்பு?” சாதாரணமாய்ச்சொன்னான் திருமலைசாமி.

 “என்ன தப்பா?...அவங்க அப்படிப் போயிட்டா அவனோடசம்பளம் மொத்தமும் அங்கே…அவ கைக்குப்போயிடுமல்ல?...ஞாபகம் வெச்சுக்கங்க…உங்க தம்பி வேலைபார்க்கறது ஐ.டி.கம்பெனில…அவன் வாங்கறது உங்க சம்பளம்மாதிரி மூணு மடங்கு” சாந்தா முகம் கொஞ்சம் கொஞ்சமாய்தந்திரமுகியாய் மாற ஆரம்பித்தது.

​அவள் தன் சம்பார்த்தனையைக் குறைத்து கூறி விட்ட்தால்மனம் நொந்து போன திருமலைசாமி, “அதுக்கென்னடி இப்போ?” எரிந்து விழுந்தான்.

​ “இங்க பாருங்க!...நான் சொல்றதை கொஞ்சம் நல்லாக்கேட்டுக்கங்க!...நமக்கு இருக்கறது ரெண்டும்பொட்டைப்புள்ளைக!....அதுக நாளைக்கே “திடு…திப்”ன்னுவயசுக்கு வந்து கலியாணத்துக்கு நின்னா நாம எங்க போறதுகாசுக்கு?...நீங்க சம்பாதிக்கறதை வெச்சு அதுகளுக்குகலியாணம் பண்றதுன்னா…ரெண்டும் கெழவி ஆனதுக்குப்பின்னாடிதான் நடக்கும்!” 

​ திருமலைசாமி குறுக்கீடு இல்லாமல் அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருக்க சாந்தா தொடர்ந்தாள். “அதான்…இன்னும்நாலஞ்சு வருஷம் உங்க தம்பி கலியாணத்தைத் தள்ளிப்போடுவோம்!...இப்ப அவன் தன்னோட சம்பளத்தை அப்படியேகொண்டாந்து என் கிட்டேதான் கொடுக்கறான்!...அதுல நான்சீட்டுப் போட்டிருக்கேன்!...நாலு வருஷத்துல பெரிய தொகைநம்ம கைக்கு வந்திடும்!...அதுல முக்கால்வாசியை எடுத்து நம்மபொண்ணுக கலியாணத்துக்குன்னு போட்டு வெச்சிட்டு.,…மீதியிருக்கற கால்வாசில உங்க தம்பிக்கு சிம்பிளா ஒருகலியாணத்தைப் பண்ணி வெச்சிடுவோம்” தன் வஞ்சகஎண்ணத்தைச் சொல்லி முடித்தாள் சாந்தா.